Picon

கணிமொழி - அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன

வணக்கம்,

கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான
படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. 

உங்கள் படைப்புகள் அடுத்த மாதப்
பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக
(08/06/2008) எம்மை வந்தடையும் 
படி பார்த்துக் கொள்ளவும்.

சுருக்கமாக சொல்லிடின்,

    * விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம்.
    * கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த
விடயமாக இருத்தல் வேண்டும்.
    * பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம்
படைப்புகள் இருத்தல் அவசியம்.
உதாரணத்திற்கு காபிலெப்ட்.
    * தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு
பகுதியில் வேறொருவர் ஏற்கனவே
பங்களித்து வருகிறார் 
எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும்.
    * கட்டுரைகள்
மொழிபெயர்ப்புகளாகவும்,
விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு
கற்று இயற்றப்பட்டவை
யாகவும் இருக்கலாம்.
    * படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம்.
    * தொழில் நுட்பம், கொள்கை விளக்கம்,
பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம்,
நையாண்டி எனப் பலசு
வைகளிலும் இத்துறைக்கு
பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம்.
    * தங்களுக்கு இயல்பான எந்தவொரு
நடையிலும் எழுதலாம்.
    * தங்களது படைப்புகளை எளியதொரு உரை
ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும்.
    * தள பராமரிப்பு, ஆதரவளித்தல்
உள்ளிட்ட ஏனைய விதங்களிலும்
தாங்கள் பங்களிக்கலாம்.
    * ஐயங்களிருப்பின் திட்டப்
பொறுப்பாளருக்கு (shriramadhas <at> gmail.com) மடலியற்றவும்.

விரிவான விவரங்களுக்கு
கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை
அணுகவும்: 
http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html

உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

-- ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email ilugc-request@... with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Gmane