19 Jul 17:54
Re: [Ilugc] கைப்பிடி தோழர்கள் திட்டம்
2008/7/19 தங்கமணி அருண் <thangam.arunx <at> gmail.com>: > > > http://ubuntu-tam.org/wiki/index.php?title=%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D > > இதன் மூலமும் பயணிக்கலாம், பரப்பிடலாம்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=Kaipidi_Thozargal இத்தகைய திட்டத்தை தன்னார்வர்களைக் கொண்ட ஒரு குழுவாக செயற்படுத்த முடிந்தமைக்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் இலவசமாக உபுண்டு வட்டுக்களை பெறாது தங்களால் இயன்றதை தந்து பெற்றுக்கொண்டோர் செய்த பேருதவியே ஆகும். ஆகையால் தாங்களும் மேற்கண்ட முகவரியிலுள்ளோரிடமிருந்து வட்டுக்களைப் பெற்றுக் கொள்ள நேர்ந்தால் இலவசமாகப் பெறாது தங்களால் இயன்ற தொகைத் தந்து பெற்றுக் கொள்ளுமாறுக் கேட்டுக் கொள்கிறோம். இது குனு/ லினக்ஸ் என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை அடிப்படையாகக் கொண்டது எனும் செய்தி பரவ வழி வகுக்கும். இத்திட்டத்தை தமிழகம் நெடுகிலும் விரிவுபடுத்த இன்னும் பல தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறோம். -- -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email ilugc-request@... with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
RSS Feed